விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்; செல்லப்பெயர் naughty boy ஆம் - என்ன காரணம் தெரியுமா?
ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
இன்சாட் 3 டிஎஆர்
வானியல் முன்னறிவிப்புகளை முன் கூட்டியே அறியும் விதமாக இன்சாட் செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு செலுத்தப்படுகிறது.
ஏற்கனவே, 2013ல் இன்சாட் 3டி செயற்கைகோளும், 2016ல் இன்சாட் 3 டிஎஆர் செயற்கைகோளும் விண்ணில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. இவற்றின் ஆயுட்காலம் முடியவுள்ளது.
இந்நிலையில், நவீன செயற்கைகோளான இன்சாட் 3 டிஎஸ் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இதற்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி
இதன் எடை, 2,274 கிலோ. இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இதனை விஞ்ஞானிகள் நாட்டி பாய் என்ற செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இதற்கு காரணம் இந்த ராக்கெட் கடந்த காலங்களில் இதுவரை நிறைய திட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் 40 சதவீதம் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.