விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்விஎப் 10 பயணம் தோல்வி: இஸ்ரோ

ISRO GSLVF10 EOS03 ISROMissions
By Irumporai Aug 12, 2021 12:17 AM GMT
Report

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தபட்ட ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக இ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த வருடத்தில் இரண்டாவதக ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி எப்.10  செய்றைகோள் உருவாக்கப்பட்டது இந்தியாவில் தான் என்பது குறிப்பிடதக்கது.

2.268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளினை விண்ணில் ஒரு கண் என அழைக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமலில் இருந்ததால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து  விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இ.ஓ.எஸ் - 03 செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.