போரை நாங்கதான் முடிப்போம்; அழிச்சுருவோம் - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Benjamin Netanyahu Israel-Hamas War
By Sumathi Oct 10, 2023 10:30 AM GMT
Report

ஹமாஸ் குழுவினருக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதல் 

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இருதரப்பிலும் மொத்தமாக 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

போரை நாங்கதான் முடிப்போம்; அழிச்சுருவோம் - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை! | Israel Pm His Military Will End The War

தற்போது இதற்கு பதில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு, பொதுமக்கள், குழந்தைகள் மீதும் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.

பிரதமர் எச்சரிக்கை

ஹமாஸ் குழுவுக்கு எதிரான போரின் வெற்றி என்பது ஒட்டுமொத்த உலகின் வெற்றி. ஹமாஸ் குழுவினர் போரை தொடங்கியிருந்தாலும் இஸ்ரேலிய ராணுவம்தான் போரை முடிவுக்கு கொண்டுவரும். இந்த போரை தங்கள் தரப்பு விரும்பவில்லை. போர் சூழலை கட்டாயப்படுத்தி விட்டனர்.

ஹமாஸ் ஆயுதக்குழு என்பது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு இணையானது. அவர்களை அழித்துவிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தங்கள் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.  

சொன்னபடியே நடக்குது; வெடிக்கும் போர், அன்றே கனித்த பாபா வாங்கா - அப்போ அந்த 3ம் உலக போர்?

சொன்னபடியே நடக்குது; வெடிக்கும் போர், அன்றே கனித்த பாபா வாங்கா - அப்போ அந்த 3ம் உலக போர்?