இதை செஞ்சா பிணைக் கைதிகளை கொன்று விடுவோம் - இஸ்ரேலுக்கு ஹமாஸ் மிரட்டல்!
இஸ்ரேல் மக்களை கொலை செய்து விடுவோம் என்று ஹமாஸ் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெடிக்கும் மோதல்
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலில் எல்லையோர பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பலரை பிணைக்கைதிகளாக காசா பகுதிக்கு பிடித்துச் சென்றனர்.
பகிரங்க மிரட்டல்
தொடர்ந்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை கடுமையாக நடத்தி வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டதாகவும் அறிவித்தது. அங்கு மின்சார விநியோகம், இணைய இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் முன் எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் தாக்குதல் நடத்தினால் தாங்கள் சிறைபிடித்துள்ள இஸ்ரேலிய மக்களை தூக்கிலிடுவோம். எதிரிகளுக்கு மனிதாபிமானம் மற்றும் நெறிமுறைகள் எதுவும் புரிவது இல்லை.
எனவே, அவர்களுக்கு புரியும் மொழியில் தீர்வு காண்போம் என்று ஹமாஸ் பயங்கரவாத குழு எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ள தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எகிப்து உதவியை இஸ்ரேல் நாடியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த யுத்தத்தில் இதுவரை 1,200க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.