சொந்த முடிவை எடுப்போம்; நட்பு நாடுகளின் அட்வைஸை ஓரம்கட்டிய இஸ்ரேல் - நடுங்கும் உலக நாடுகள்!
இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-இஸ்ரேல்
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் இஸ்ரேலால் தாக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஆனால், அமெரிக்காவின் உதவியின் மூலம் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுவதால ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என கருதப்படுகிறது.
3ஆம் உலகப்போர்?
இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் தனது நட்பு நாடுகளின் ஆலோசனைக்கு முரண்பட்டாலும், இஸ்ரேல் தனது சொந்த முடிவுகளை எடுக்கும்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்தையும் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.