ஈரான் பயங்கர தாக்குதல்; எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் - உற்றுநோக்கிய உலக நாடுகள்!
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து பல உயிரிழப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமனில் இருந்து நடத்தப்பட்டது.
இதனையடுத்து இஸ்ரேல் அமைச்சர் பென்னி காண்ட்ஸ், சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்றும் இதற்கு ஈரான் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
ஐ.நா கவலை
மேலும், ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியா குட்டரெஸ், இரண்டு தரப்பினரும் உடனடியாக மோதலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளுடன் சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
ஈரானின் தாக்குதலுக்கு கனடா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.