அப்படியே நடக்கும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு; மன்னர்-இளவரசிக்கு புற்று நோய்!

Kate Middleton England King Charles III
By Sumathi Mar 27, 2024 06:50 AM GMT
Report

 நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

 நாஸ்ட்ராடாமஸ்

16ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ். அழிவின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறார். 2024 ஆம் ஆண்டிற்கான சில பயங்கரமான கணிப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

kate middleton - charles 3

முன்னதாக, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின் எழுச்சி ஆகியவற்றை சரியாகக் கணித்தார். 2024-ம் ஆண்டு முடியாட்சிக்கு கடினமான காலகட்டமாக இருக்கும்.

நெருங்கும் அழிவுகாலம்? 2024ல் நிகழப்போகும் பேரழிவுகள் - நாஸ்ட்ராடாமஸின் ஷாக் கணிப்பு!

நெருங்கும் அழிவுகாலம்? 2024ல் நிகழப்போகும் பேரழிவுகள் - நாஸ்ட்ராடாமஸின் ஷாக் கணிப்பு!

பலிக்கும் கணிப்பு

தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து அபகரிக்கப்படுவார் என கணித்திருந்தார். அதன்படி, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மருமகள் இளவரசி கேத் மிடில்டன் ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

kind charles with harry

தீவுகளின் மன்னர் என்பது சார்லசைக் குறிப்பதாகவும், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவர் என்பது ஹாரியைக் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் தற்போது பெரும் கவனம் ஈர்த்துள்ளது.