2024-இல் மீண்டும் மோடி..புடின் மரணம் !!முடியும் இந்தியா ரஷ்யா உறவு..! பலிக்குமா கணிப்புகள்..?

Vladimir Putin Narendra Modi India
By Karthick Dec 25, 2023 11:55 AM GMT
Karthick

Karthick

in உலகம்
Report

வரும் 2024-ஆம் ஆண்டு துவங்க இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில், தொடர்ந்து பல கணிப்புகள் வெளியாகி கொண்டே இருக்கின்றது.

2024 கணிப்புகள்

புது வருடம் துவங்கும் நிலையில், பல மக்களும் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். பல கணிப்புகளும் வெளியாகி வரும் நிலையில், உலக மக்களின் கவனத்தை தற்போது பெற்றுள்ளது 'புதிய நாஸ்ட்ராடாமஸ்' கணிப்புகள்.

2024-predictions-says-modi-will-be-pm-again

அந்த கணிப்புகளில் இந்திய மக்களின் கவனத்தை பெரிதும் பெற்றுள்ளது மீண்டும் பிரதமர் மோடி தான் என்பது. நாட்டின் பிரதமராக மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்றார். குற்றசாட்டுகளை பல இருப்பின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக மோடி உயர்ந்துள்ளார்.

மீண்டும் மோடி

வரும் 2024-ஆம் ஆண்டில் மீண்டும், அவரே பிரதமராக பதவிபெறற் பதவியேற்பார் என்று கூறுகிறது 'புதிய நாஸ்ட்ராடாமஸ்' கணிப்பு. அதே நேரத்தில் அனைவரையும் உலுக்கிய ஒரு கணிப்பு ரஷ்யா அதிபர் புடினின் மரணம் குறித்தானது.

2024-predictions-says-modi-will-be-pm-again

ரஷ்யா நாட்டின் அதிபர் தேர்தலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சூழலில் அதில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குவதாக புடின் அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகளின் கவனம் அந்த தேர்தல் மீது விழுந்துள்ளது. ஆனால், அடுத்தாண்டு புடின் மறைவார் என்று 'புதிய நாஸ்ட்ராடாமஸ்' கணித்துள்ளது தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

2024-predictions-says-modi-will-be-pm-again

அதே போல, அடுத்த ஆண்டு இந்தியா ரஷ்யா நாடுகளுக்கிடையேனே சுமுகமான நட்பு முடிவிற்கு வரும் என்றும் 'புதிய நாஸ்ட்ராடாமஸ்' கணித்துள்ளது. சரி இதெல்லாம் எவ்வாறு நம்புவது என்று நீங்கள் கேட்டால், அதற்கும் விடை உண்டு.கோவிட் தொற்றுநோய், பிரெக்சிட், டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி பதவி மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கணிப்புகளை மேற்கொள்பவர் கிரேக் ஹாமில்டன் என்பவர்