சற்றும் இரக்கம் காட்டாத இஸ்ரேல் - பிஞ்சுக் குழந்தைகளை கூட விட்டுவைக்காத கொடூரம்!
இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
திணறும் லெபனான்
சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இரு தரப்பினரும் செவிசாய்த்தபாடில்லை. இதற்கிடையில் தெற்கு லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் பல பேஜர்கள் திடீர் திடீரென வெடித்தன.
இஸ்ரேல் தான் தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமா வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள், ராக்கெட் லாக்கர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதுவரை நடந்துள்ள தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை தளபதியான முகமது உசைன் ஸ்ரோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.