6 மாதங்களில் 700 குழந்தைகள் பலி; காரணம் தெரியுமா? திடுக்கிடும் தகவல்!

Afghanistan Death
By Sumathi Sep 13, 2024 01:30 PM GMT
Report

கடந்த 6 மாதங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வறுமை

ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டுகால போர், வறுமை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு சூழ்நிலை ஒவ்வொரு நாளும் கட்டுப்பாட்டை மீறி வருகிறது.

afghanistan

அந்த வரிசையில், 3.2 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய உணவு கிடைக்காமல் குழந்தைகள் இறக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இறந்த தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை உயிருடன் எடுத்த மருத்துவர்கள்!

இறந்த தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை உயிருடன் எடுத்த மருத்துவர்கள்!

700 குழந்தைகள் பலி

மருத்துவமனைகளில் 7-8 படுக்கைகளில் சுமார் 18 குழந்தைகள் கிடக்கின்றனர். இங்கே குழந்தைகளால் நகரவோ அல்லது ஒலி எழுப்பவோ கூட முடியவில்லை. அத்தனை பலவீனமாக உள்ளனர்.

6 மாதங்களில் 700 குழந்தைகள் பலி; காரணம் தெரியுமா? திடுக்கிடும் தகவல்! | Afghanistan 1 Million Kids Face Starvation

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 700 குழந்தைகள் இறந்துள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர்.

சுகாதார மையம், உலக வங்கி மற்றும் யுனிசெஃப் ஆகியவை நிதியுதவியை வழங்கவில்லை என்றால் இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.