பெற்றோரின் அலட்சியம்..உயிரிழந்த குழந்தை -பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
ஷாப்பிங் மால் வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்), ஒன்றரை வயது பெண் குழந்தை மீது கார் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் காஸ்மோஸ் மால் உள்ளது. இந்த மாலுக்கு ஜெய்தீப் தனது மனைவி, அவர்களது 10 வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகளுடன் காஸ்மோஸ் மாலில் ஷாப்பிங் சென்றிருந்தார்.அங்கு சில பொருள்களை வாங்கி கொண்டு வாகன நிறுத்தும் (பார்க்கிங்) இடத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது வாங்கிய பொருட்களை சரிபார்த்துக் கொண்டிருந்த பெற்றோர் குழந்தையை கவனிக்காமல் இருந்துள்ளனர். அப்போது அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தை காரின் முன் சென்றுள்ளது. ஓட்டுநரும் இதை கவனிக்காமல் காரை குழந்தை மீது ஏற்றியுள்ளார்.
விபத்து
அப்போது குழந்தையின் அழுகையைக் கேட்ட தாய் காரின் டயரில் சிக்கிய குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் . அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆக்ரா போலீசார் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
வணிக வளாக ஊழியர்களின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு ஒன்றரை வயது குழந்தை உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.