திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; 40,000ஐ கடந்த உயிரிழப்பு - ஐநா கண்டனம்!
உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 41,0020 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இரு தரப்பினரும் செவிசாய்த்தபாடில்லை. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
ஐநா கண்டனம்
மேலும், தெற்கு காஸாவில் மவாசி என்ற பகுதியில் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்தவர்கள் மீதும் குண்டுவீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் சர்வதேச மனித உரிமைகள் விதிகளை மதிக்க வேண்டும். பிணைக்கைதிகளை இருதரப்பினரும் விடுவிக்க வேண்டும் என்று ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் Tor Wennesland கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 41,0020 ஆக உயர்ந்துள்ளது.