காசாவில் போர் நிறுத்தமா? குழந்தைகளுக்காக இஸ்ரேல் பிரதமரின் அதிரடி முடிவு!

Israel World Gaza
By Vidhya Senthil Aug 30, 2024 06:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

குழந்தைகளுக்குப் போலியோ தடுப்புமருந்து அளிப்பதற்காக காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது .

 காசா

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க காசாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் 40,602-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 93,855-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 19 லட்சம் பேர் தங்கள் உடமைகளை இழந்து இருப்பிடங்களைவிட்டு இடம் பெயர்ந்து தவித்து வருகின்றனர்.

காசாவில் போர் நிறுத்தமா? குழந்தைகளுக்காக இஸ்ரேல் பிரதமரின் அதிரடி முடிவு! | Ceasefire In Parts Of Gaza Netanyahu Approves

இதனால் அந்தப் பகுதியில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து போன்ற நோய்த் தடுப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததால் காய்ச்சல் , காலரா போன்ற நோய்கள் அங்கு அதிக அளவில் பரவிவருகின்றன.

24 மணி நேரத்தில் 68 பேர் பலி; போலியோவை தடுக்க போர் நிறுத்தம் - களத்தில் ஐநா

24 மணி நேரத்தில் 68 பேர் பலி; போலியோவை தடுக்க போர் நிறுத்தம் - களத்தில் ஐநா

25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ பரவல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஜூலை 30- ஆம் தேதி அறிவித்தது. இந்தச் சூழலில்,போலியோ தடுப்புமருந்து அளிப்பதற்காக காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது .

இஸ்ரேல் அரசு 

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' காசாவில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து அளிப்பதற்காக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகச் செய்திகளில் தகவல்கள் வெளியானது .

காசாவில் போர் நிறுத்தமா? குழந்தைகளுக்காக இஸ்ரேல் பிரதமரின் அதிரடி முடிவு! | Ceasefire In Parts Of Gaza Netanyahu Approves

அது முற்றிலும் தவறாது. காசாவில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிககளில் மட்டும் போரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மருத்துவர்களின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.