1 வார கால போர் நிறுத்தம் முடிவு; மீண்டும் குண்டுமழை - உலகநாடுகள் அதிருப்தி!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான ஒரு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ்
நவ.7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 400-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவில் இருந்தனர். இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொடர் முயற்சி காரணமாக ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. எனவே, கடந்த மாதம் 24-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த ஒரு வாரக் காலத்தில் மொத்தம் 105 பிணையக் கைதிகளை ஹமாஸ் விடுவித்திருந்தது.
மீண்டும் குண்டுமழை
அதேபோல இஸ்ரேலும் சுமார் 240 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தனர். தற்போது, போர் நிறுத்த காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தாக்குதல் முற்றியுள்ளது. உடனே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல் கித்ரா தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றும் முடிந்தபாடில்லை. இதற்கிடையில், ஐநாவும் தொடர்ந்து போரை நிறுத்த வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.