இஸ்ரேல் போர் : ட்ரெண்டாகும் ஒசாமா பின்லேடனின் கடிதம் - அமெரிக்காவில் பரபரப்பு!
21 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு பின்லேடன் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதில் இருதரப்பில் பலி எண்ணிக்கை சுமார் 10,000த்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த போரில் பெரும்பாலான நாடுகள் ஹமாஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா இதில் யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளது. இஸ்ரேலுக்குத் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
இதற்கிடையில் மறைந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு எழுதியாதாக கூறப்படும் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 2002ல் பின்லேடன் அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார். அமெரிக்க மக்களுக்கு அந்த கடிதத்தை பின்லேடன் எழுதியதாகக் கூறப்படுகிறது.
ஒசாமா பின்லேடன் கடிதம்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், அமெரிக்கா இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், பலரும் இந்தக் கடிதத்தைப் பகிர்ந்து இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த கடிதத்தில் பின்லேடன், நாங்கள் ஏன் போராடுகிறோம், ஏன் அமெரிக்காவை எதிர்க்கிறோம்?" மற்றும் "உங்களிடம் (அமெரிக்காவிடம்) இருந்து என்ன வேண்டும்" என்று பல கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதிலைக் கொடுத்திருப்பது போல அந்த கடிதம் அமைந்திருந்தது. ந்த கடிதம் இணையத்தில் டிரெண்டான நிலையில், பலரும் பல வித கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
முதலில் இந்த கடிதம் அமெரிக்காவில் டிக்டாக் தளத்தில் டிரெண்டாகி பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து அந்த கடிதத்தை டிக்டாக் தளம் நீக்கியுள்ளது. டிக்டாக் பாலிசிக்கு எதிராக இந்த கடிதம் உள்ளதாகவும் வெளிப்படையாகப் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தக் கடிதம் இருப்பதால் இதை தங்கள் தளத்திலிருந்து நீக்குவதாக டிக்டாக் அறிவித்துள்ளது.