எல்லாம் தயார் தான்; ஆனாலும், காசா மீது படையெடுக்க தாமதிக்கும் இஸ்ரேல் - இதுதான் காரணமே!
தரைவழி தாக்குதலைத் தொடங்காமல் இஸ்ரேல் தாமதித்து வருகிறது.
தரைவழி தாக்குதல்
இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதல் தற்போது பெரும் போராக வெடித்துள்ளது. இதில் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
காசா எல்லையில், பீரங்கிகளையும் குவித்து வருகிறது. ஆனால், இன்னும் தரைவழித் தாக்குதலை தொடங்காமல் தாமதித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக் அங்கு மேகமூட்டமான வானிலை நிலவுகிறது.
தாமதிக்கும் இஸ்ரேல்
இதனால், பைலட்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தரைப்படைகளுக்கு உரிய முறையில் பாதுகாப்பை வழங்க முடியாது. மேலும், ஹமாஸ் படை இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர் பலரை பிணையக் கைதிகளாக தங்கள் சுரங்கங்களை வைத்துள்ளனர்.
இதனால் தரைவழித் தாக்குதல் போது இஸ்ரேல் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். எனவே, பிணையக் கைதிகளை முதலில் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் விதித்த காலக்கெடு முடியும் நிலையில்,
அடுத்தக்கட்ட தாக்குதல் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
முன்னதாக, 2008இல் காசா மீது படையெடுத்து மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் முயன்ற நிலையில், அதன் பிறகு சுமார் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் படையெடுக்க தயாராவது குறிப்பிடத்தக்கது.