இஸ்ரேலில் வெடிக்கும் போர் - டாப் ஐடி நிறுவனங்கள் ஆஃபிஸ் இந்தியாவிற்கு மாற்றம்?
ஐடி நிறுவனங்கள், இந்தியாவில் கிளைகளை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெடிக்கும் போர்
இஸ்ரேலில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றன. மென்பொருள் நிறுவனங்கள், சைபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் போன்று ஏராளமாக இருப்பதால்
இந்தியாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் அங்குச்சென்று தங்கள் கிளைகளை திறந்துள்ளனர். இதில், டிசிஎஸ்,விப்ரோ, டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் உள்ளிட்டவை அடங்கும்.
இந்தியாவிற்கு மாற்றம்?
மேலும், உலகின் பல்வேறு நாடுகளுமே இஸ்ரேலின் உளவு மென்பொருள்களை பயன்படுத்துகின்றன. தற்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் திவீரமடைந்துள்ள நிலையில், ஐடி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இன்னும் நிலைமையை மோசமாக்கும். உலக அளவில் கடன்கள் அதிகரித்துவரும் நிலையில்,புதிய கடன்களை ஐடி நிறுவனங்கள் தவிர்ப்பது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் அலுவலகங்களை கொண்டுள்ள உலகலாவிய தொழில் நுட்ப நிறுவனங்கள், வணிக நடவடிக்கையை இந்தியா உள்பட பிற இடங்களுக்கு மாற்றக்கூடும் என தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.