அகதிகள் முகாமில் வெறிக்கொண்டு தாக்குதல் - 33 பேர் பலி!

Israel Death Israel-Hamas War
By Sumathi Oct 19, 2024 11:00 AM GMT
Report

அகதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அகதிகள் முகாம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்துள்ளது. இதில், இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

camp

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக முற்றுகையிடப்பட்ட வடக்கு காசாவின் ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வேலை இல்லாதவரை திருமணம் செய்த பெண்கள் - அதிக குழந்தைகளுக்கு தந்தையாக ஆசை

வேலை இல்லாதவரை திருமணம் செய்த பெண்கள் - அதிக குழந்தைகளுக்கு தந்தையாக ஆசை

33 பேர் பலி

இதற்கிடையில், வடக்கு காசாவில் உள்ள பைட் லாஹியாவில் செயல்பட்டு வரும் இந்தோனேசிய மருத்துவமனையை இஸ்ரேலிய டாங்கிகள் முற்றிலுமாக சுற்றி வளைத்துள்ளது. மருத்துவமனையின் மின்சாரத்தையும் துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் உட்பட பலருக்கும் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அகதிகள் முகாமில் வெறிக்கொண்டு தாக்குதல் - 33 பேர் பலி! | Israel Attack North Gazas Jabalia Camp 33 Died

மேலும், பீரங்கி குண்டுகளால் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களை குறிவைத்து, மருத்துவ ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஹமாஸின் கடைசி நபரை அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என இஸ்ரேல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.