விபத்தான லாரியில் பெட்ரோல் சேகரித்த மக்கள் - வெடித்து சிதறியதில் 147 பேர் பலி
பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 147 பேர் உயிரிழந்துள்ளனர்.
டேங்கர் லாரி விபத்து
நைஜீரியா நாட்டின் ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா நகரில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று, நள்ளிரவில் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது. அப்போது லாரியில் இருந்த எரிபொருள் சாலையில் ஆறு போல் ஓடியது.
வெடித்த டேங்கர் லாரி
அப்போது அங்கிருந்த ஏராளமானோர் பெட்ரோலை சேகரித்து செல்வதற்கு லாரியை சுற்றி குவிந்தனா். அந்த சமயத்தில் திடீரென டேங்கர் லாரி வெடித்து சிதறியது.
அப்போது அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் தற்போது வரை 147 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் உடல் முற்றிலுமாக கருகி உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.