நொறுங்கிய பயணிகள் விமானம்; 18 பேர் பலி - பதற வைக்கும் வீடியோ
நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
நேபாளம்
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு இன்று காலை 11 மணியளவில் சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 19 பயணிகள் பயணித்தனர்.
விமானம் புறப்படும் போது ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி சென்று திடீரென நொறுங்கி விழுந்தது. விமானம் விழுந்த உடனேயே தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் இறங்கினர்.
உயிரிழப்பு
விமானத்தில் இருந்த விமானியை தவிர 18 பெரும் உயிரிழந்துள்ளனர். விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Horribly tragedy … Nepal plane crash killed 18 … last year in January 2023 crash took 72 lives when Yeti airline plans crashed near Pokhara .. this time it’s Saurya Airlines #NepalAircrash pic.twitter.com/Wr0AyVfJCe
— Rohit Vishwakarma (@RohitVEditor) July 24, 2024
தற்போது திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட்டுள்ளது. மேலும் விமானம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.