பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அபராதம் - இஸ்லாமிய நாடு அதிரடி உத்தரவு!
ஹிஜாப் அணிந்தால் பல லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் தடை
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். இந்நாட்டில் 1 கோடி பேர் வசிக்கின்றனர். அதில் 96% பேர் இஸ்லாமியர்கள்.அண்மை காலமாக மதசார்பற்ற நாடு என்று அடையாளப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் என்பது வேற்றுகிரகவாசிகளின் ஆடை என்றும், தடையை மீறுபவர்களுக்கு 8 ஆயிரம் முதல் 65 ஆயிரம் சோமனி (இந்திய மதிப்பில் ரூ.60,000 முதல் ரூ.5 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சங்களில் அபராதம்
பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், மத அலுவலர்கள் இந்த சட்டத்தை மீறினால், இதை விட அதிக அபராதம் விதிக்கப்படும். மேலும், பக்ரீத் பண்டிகையின்போது, பெரியவர்களிடம் இருந்து சிறுவர்கள் பணம் பெறும் மத சடங்கான ஈதி வழக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அரசு அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாப் அணிய தடை இருக்கிறது.
இதை பின்பற்றி, தஜிகிஸ்தான் அரசும் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபரின் இந்த ஒப்புதல்களுக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.