ஹிஜாப் அணியாத வீராங்கனை - வீட்டை இடித்து தள்ளிய அரசு!
ஹிஜாப் இல்லாமல் பங்கேற்ற வீராங்கனையின் வீட்டை ஈரான் அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.
ஹிஜாப் விவகாரம்
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சர்வதேச வீராங்கனையான எல்னாஸ் ரெகாபி. இவர் தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தடையேறுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதில் அரசின் விதிகளை மீறி ஹிஜாபை கழற்றி,
தலைமுடியை போனிடெயிலாக போட்டுக்கொண்டு போட்டியில் களமிறங்கினார். இவரின் இச்செயலுக்கு போராட்டக்காரர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். அதன்பின் போட்டி முடிந்து வந்த எல்னாஸ் தனது செயல் தற்செயலானது, உள்நோக்கம் இல்லை என்று கருத்து தெரிவித்தார்.
பகீர் சம்பவம்
அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், ஈரான் அரசு இதற்கு மோசமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எல்னாஸ் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அந்நாட்டு அரசு, அவரது பதக்கங்களை சாலைகளில் தூக்கி வீசியுள்ளது.
இது அங்குள்ளவர்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் மக்கள் போராட்டத்திற்கு பணிந்து கலாச்சார காவல்பிரிவு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.