சொந்தமாக ரயில் வைத்திருந்த பிரபல பாடகி- 10 மொழிகளில் வெளியான பாடல்கள் - யார் அது?
பாலியல் தொழில் செய்வோர் கவுகர் ஜானை அரவணைத்துக் கொண்டனர்.
பாடகி
லதா மங்கேஷ்கர் முதல் ஸ்ரேயா கோஷல் வரை ஏராளமான பாடகிகள் இந்திய சினிமாவில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்கள்.ஆனால் இந்தியாவின் முதல் கோடீஸ்வர பாடகி குறித்த தகவல்கள் பெரும்பாலானோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அவர் பாடல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும்போதெல்லாம் தனி ரயிலில்தான் செல்வாராம்.
யார் இந்த கோடீஸ்வர பாடகி குறித்து செய்திக் குறிப்பில் பார்க்கலாம். 1902 ஆம் ஆண்டு தனது முதல் பாடலை பதிவு செய்து பின்னாளில் சொத்துக்களைக் குவித்த பாடகியாகப் புகழ் பெற்ற கவுகர் ஜான் தான் அந்த கோடீஸ்வர பாடகி. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த தந்தைக்கும் இந்திய தாய்க்கும் மகளாக பிறந்தவர் தான் கவுகர் ஜான்.
பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக கவுகர் ஜான் பிரிந்தார். அதன்பிறகு பாலியல் விடுதியில்தான் வளர்ந்தார். அங்கு பாலியல் தொழில் செய்வோர் கவுகர் ஜானை அரவணைத்துக் கொண்டனர்.அங்கு நடனம் கற்றுக் கொண்ட அவர்,' தொடர்ந்து பாடல்களையும் கற்றுப் புகழ் பெற்றார்.
சொந்த ரயில்
1902 ஆம் ஆண்டு தனது முதல் பாடலை மக்கள் மத்தியில் பதிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு பாடல்களைப் பாடினார். 1920 வரை கவுகர் ஜான் 10கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 600 பாடல்களைப் பாடி அசத்தினார். அப்போதைய கால கட்டத்தில் ஒரு பாடலுக்கு கவுகர் ஜான் ரூ. 3 ஆயிரம் வரை பெறப்பட்டார்.
அதுமட்டுமில்லாமல் மன்னர்களால் கச்சேரிக்கு அழைக்கப்படும் இடங்களில் தன்னுடைய சொந்த ரயிலில் மூலம் தான் கவுகர் பயணம் செல்வாராம்.
இவர்தான் இந்தியாவின் முதல் கோடீஸ்வர பாடகி என்றும், இவர் அளவுக்கு தற்பொழுது வரை பாடகியாகச் செல்வாக்கு பெறவில்லை என்று கூறப்படுகிறது.