ஒரே படத்தில் 72 பாடல்கள் - எந்த படம் தெரியுமா?
ஒரு படத்தில் 72 பாடல்கள் இடம் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
பாடல்கள்
திரைப்படத்திற்கு கதை, நடிகர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கதை நன்றாக இல்லாவிட்டாலும் அந்த படத்தில் உள்ள பாடல்களே சில படங்கள் காலத்திற்கும் நினைவில் வைத்து கொண்டாடப்படும். பெரும்பாலும் படங்களில் 4முதல் 6 பாடல்கள் இருக்கும். தற்போது பாடல்களே இல்லாத திரைப்படங்கள் கூட வர துவங்விட்டது.
கின்னஸ் சாதனை
ஆனால் 1936 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த இந்திர சபா என்கிற திரைப்படத்தில் 72 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.72 பாடல்களுக்கும் நாகர்தாஸ் நாயக் என்பவர் இசையமைத்து உள்ளார். 19ம் நூற்றாண்டின் உருது மேடை நாடகமான இந்தெர்சபா என்பதிலிருந்து இது படமாக எடுக்கப்பட்டது.
இந்த படத்தை ஜமாஹெட்ஜி மற்றும் ஜஹாங்கீர்ஜி மதன் ஆகியோர் இயக்கினர். இந்த படத்தில் நிசார், ஜெஹ்ரானா கசான், அப்துல் ரகுமான் காபுலி ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர்.
உலகிலே அதிக பாடல்களை கொண்ட படம் என்று இந்திர சபா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.