ஹிந்தி பிக்பாஸில் முதல் முறையாக தமிழ் நடிகை - இவர் பிரபல நடிகரின் பேத்தி கூடவாம்...

Bigg Boss Cooku with Comali Shrutika Salman Khan Tamil Actress
By Karthikraja Oct 09, 2024 06:00 PM GMT
Report

ஹிந்தி பிக்பாஸில் முதல் முறையாக தமிழ் நடிகை ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.

ஹிந்தி பிக்பாஸ்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்வு நடைபெற்றாலும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்வுக்குதான் பெரிய மவுசு உண்டு. 

salman khan in hindi biggboss

ஹிந்தி பிக்பாஸில் நடப்பது போன்று சண்டையும், ரொமான்ஸும் வேறு எங்கும் நடப்பது இல்லை.ஹிந்தி பிக்பாஸ் நிகழ்வை பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். 

கணவர் எனக்கு அந்தமாதிரி படம் காட்டினார்; அப்போ எனக்கு அது வந்துருச்சு - ஓப்பனாக சொன்ன ஷ்ருதிகா!

கணவர் எனக்கு அந்தமாதிரி படம் காட்டினார்; அப்போ எனக்கு அது வந்துருச்சு - ஓப்பனாக சொன்ன ஷ்ருதிகா!

சுருத்திகா

இந்நிலையில் ஹிந்தி பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் நடிகை ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அவர் வேறு யாருமில்லை சூர்யா நடித்த ஸ்ரீ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சுருத்திகாதான். அதை தொடர்ந்து நலதமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

shruthika arjun in hindi bigg boss

இதன் பின் சினிமாவிலிருந்து விலகியிருந்த இவர், குக் வித் கோமாளி நிகழ்வில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். இவர் மறைந்த தமிழ் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார்.

தமிழில் பேசிய சுருத்திகா

இந்நிலையில் ஹிந்தி பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டுள்ள இவர், சல்மான் கான் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும்போதே, “நான் தமிழ் நடிகை எங்களுடைய ரசிகர்களுக்காக நீங்க தமிழில் வணக்கம் சொல்லுங்க” என தனது சுட்டித்தனத்தை வெளிக்காட்டியுள்ளார் சுருத்திகா.

மேலும், நேற்று சுருத்திகா பேசிக்கொண்டிருந்ததை என்னவென்று பிக்பாஸ் கேட்க, இந்தி நிகழ்வில் இருப்பதை மறந்து “சும்மா பிக்பாஸ்” என்று தமிழில் பதிலளித்தார். சும்மா என்றால் என்னவென பிக்பாஸ் கேட்க சிரித்துக்கொண்டே சுருத்திகா விளக்கமளித்தார். 

முதல் நாளில் இவர் செயற்கைத்தனமாக இருக்கிறார் என கருத்து தெரிவித்த ஹிந்தி ரசிகர்கள் தற்போது சுருதிக்காவின் செயல்கள் ரசிக்கும்படி உள்ளது என கூறுகின்றனர்.