1 வயதிலேயே.. உலக சாதனை செய்து அசத்திய CWC பிரபலம் மகள் - குவியும் வாழ்த்துக்கள்!

Tamil Cinema Pugazh Guinness World Records
By Swetha Oct 15, 2024 10:19 AM GMT
Report

புகழின் மகள் ரித்தன்யா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

மகள் 

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். முன்னதாக கலக்க போவது யாரு, சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் தனது காமெடி தனக்கென தனி ரசிக பட்டாளைத்தை உருவாக்கியவர் புகழ்.

1 வயதிலேயே.. உலக சாதனை செய்து அசத்திய CWC பிரபலம் மகள் - குவியும் வாழ்த்துக்கள்! | Cwc Fame Pugazh Daughter Set A New World Record

இன்று சினிமாவில் அடுத்து அடுத்து படங்கள் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். புகழ் இரண்டு வருடங்களுக்கு முன் தனது காதலி பென்ஸியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 1 வயது கூட நிரம்பாத ரிதன்யா என்கிற மகள் இருக்கிறார்.

சூரியின் ஊருக்கு போனேன்.. அவர் இப்படி பண்ணுவாருனு நினைக்கல - போட்டுடைத்த புகழ்!

சூரியின் ஊருக்கு போனேன்.. அவர் இப்படி பண்ணுவாருனு நினைக்கல - போட்டுடைத்த புகழ்!

சாதனை 

அவர் சமீபத்தில் தனது மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அவரின் குழந்தைக்கு வாழ்த்துகள் குவிந்தன.

1 வயதிலேயே.. உலக சாதனை செய்து அசத்திய CWC பிரபலம் மகள் - குவியும் வாழ்த்துக்கள்! | Cwc Fame Pugazh Daughter Set A New World Record

இந்த நிலையில் புகழின் மகள் ரித்தன்யா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். ஆம். அதிக நேரம் Dumbbellஐ தூக்கிய குழந்தை என்ற சாதனை செய்து சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

11 மாதங்கள் 16 நாட்களே ஆன ரிதன்யா, 2 கிலோ எடையுள்ள டம்ப்பெல்லை இடைவிடாமல் 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்று அதிகாரப்பூர்வ இணையத்தில் தெரியவந்துள்ளது.