அசத்தல் அப்டேட்; இனி ரயில் பயணத்தில் zomato-வில் ஆர்டர் செய்யலாம் - IRCTC அறிவிப்பு!

Indian Railways Zomato
By Sumathi Oct 23, 2023 07:48 AM GMT
Report

ஐஆர்சிடிசி உணவு ஆர்டர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐஆர்சிடிசி

ஒரு சில ரயில்களில் பயணத்துடன் உணவுக்கும் பணம் வசூலிக்கப்பட்டு ரயிலிலேயே உணவு வழங்கப்படும். அதை தாண்டி, zoop என்ற ஆப் மூலம்

irctc

உணவு ஆர்டர் செய்து ஸ்டேஷன்களில் நிற்கும் சமயம் தங்களது சீட்டிலேயே உணவை பெறலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தற்போது IRCTC, ZOMATO உடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.

விரத நாட்களில் சைவம் மட்டும் தானா.? அதிர்ச்சியில் பயணிகள் - ரயில்வே விளக்கம்!

விரத நாட்களில் சைவம் மட்டும் தானா.? அதிர்ச்சியில் பயணிகள் - ரயில்வே விளக்கம்!

ZOMATO

முதலில் ஐந்து ரயில் நிலையங்களில் மட்டுமே ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட் (PoC) கீழ் தொடங்கப்படும். புது டெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ, வாரணாசி போன்ற நிலையங்கள் அடங்கும். IRCTC இ-கேட்டரிங் போர்டல் மூலம் பயணிகள் உணவை ஆர்டர் செய்தால்,

zomato

அவற்றை Zomato டெலிவரி செய்யும். இதன் மூல, ரயில் உணவுகள் போக வேறு கடைகளில் இருந்தும் விருப்பமான விழாக்கால உணவுகளை பயணிகள் வாங்கிக் கொள்ளலாம். இதற்கிடையில், நவராத்திரியை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு இந்திய ரயில்வே சிறப்பு தாலி உணவுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.