விரத நாட்களில் சைவம் மட்டும் தானா.? அதிர்ச்சியில் பயணிகள் - ரயில்வே விளக்கம்!
விரத நாட்களில் ரயிலில் சைவம் மட்டும் வழங்கப்படும் என தகவல் பரவி வருகிறது.
சைவம் மட்டும்
தமிழ் நாள்காட்டியின்படி, நடைபெறும் ஆவணி மாதம் சவான் என அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் ரயில்களில் சைவ உணவுகள் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
அதன்படி, 'பிகார் பாகல்பூரில் உள்ள ஐஆர்சிடிசி அலுவலர்கள், சவான் மாதத்தில் பயணிகளுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படாது. எனவே, ஜூலை 4 முதல் அசைவ உணவுகள் நிறுத்தப்படும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ரயில்வே விளக்கம்
ஏனென்றால், இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் இந்துக்கள் விரதம் இருந்து, சிவனை வழிபடுகின்றனர். அதனையடுத்து இதற்கு தற்போது ஐஆர்சிடிசி ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
அதில், ‘IRCTC இது போன்ற எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. ஜூலை 4 முதல் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அனைத்துப் பயணிகளுக்கும் பட்டியலில் உள்ள அனைத்து உணவு வகைகளும் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அசைவ உணவு ரயில்களில் கொடுக்கப்படாது எனக் கூறும் செய்திகள் தவறானது என இந்தியன் ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.