வாட்ஸ் அப் மூலம் இனி ரயில் உணவுக்கு முன்பதிவு - ரயில்வே சூப்பர் அறிவிப்பு
ரயில் பயணிகள் ஆன்லைன் வாயிலான உணவை வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவை அமலாக உள்ளது.
உணவு முன்பதிவு
இந்திய ரயில்வேயைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவு, உணவு, தங்கும் வசதி போன்ற பல்வேறு சேவைகளை பயணிகளுக்கு வழங்கி வருகிறது. இணையதளம் மற்றும் செயலி வாயிலாக நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் உணவுகள் வழங்கப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், தற்போது வாட்ஸ்-அப் தகவல் மூலம் முன்பதிவு செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையைப் பெற +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண்ணை வாடிக்கையாளருக்காக அறிவித்துள்ளது.
ரயில்வே அறிவிப்பு
வாடிக்கையாளரின் பின்னூட்டம், கருத்துக்களின் அடிப்படையில், மற்ற ரயில்களிலும் இந்த வசதியை நிறுவனம் வழங்கும்.www.catering.irctc.co.in மற்றும் அதனுடைய செயலி மூலம் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக நிறுவனம் மின்னணு வாயிலாக உணவு வழங்குதல் சேவையைத் தொடங்கியது.
ஆன்லைன் மூலம் பயணச் சீட்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு வாட்ஸ்-அப் எண் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தேர்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்ய முடியும்.