துபாய், அபுதாபியை குறைந்த செலவில் சுற்றி பார்க்கனுமா - ஐஆர்சிடிசியின் அசத்தல் டூர் பேக்கேஜ் இதோ..
சுற்றுலா பயண திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுலா பயணம்
கிறிஸ்துமஸ் சிறப்பு துபாய் டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜ் 6 இரவுகள் மற்றும் 7 பகல்களுக்கானது. அபுதாபி மற்றும் துபாய்க்கு செல்லலாம்.
இந்தூரில் இருந்து டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பயணிகள் டூர் பேக்கேஜில் விமானத்தில் பயணம் செய்யலாம். டிசம்பர் 30ம் தேதி முடிவடைகிறது. தங்குமிடம் மற்றும் உணவுகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கப்படுகிறது. பயணக் காப்பீடு வசதியையும் பெறலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்
ஐஆர்சிடிசி-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 8287931723 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மூலம் சுற்றுலாப் பயணிகள் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். டூர் பேக்கேஜில் தனியாக பயணம் செய்தால் ஒரு நபருக்கு ரூ.1,18,500 செலுத்த வேண்டும்.
இரண்டு பேருடன் நீங்கள் பயணம் செய்தால், ஒருவருக்கு ரூ.1,03,000 செலுத்த வேண்டும். மூன்று பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.1,01,000 செலுத்த வேண்டும்.
5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் படுக்கை வசதியுடன் கூடிய சுற்றுலாப் பேக்கேஜ்-க்கு ரூ.99,000 செலுத்த வேண்டும். படுக்கை வசதி இல்லாத 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.90,100 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.