குறைந்த பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு போகணுமா? - IRCTC-யின் சுற்றுலா பேக்கேஜ் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
மிக குறைவான பட்ஜெட்டில் வெளிநாடுகளில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
சுற்றுலா பேக்கேஜ்
ஐஆர்சிடிசி நிறுவனம், மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற சர்வதேச பேக்கேஜ்களை வழங்குகிறது. அப்படி ஐஆர்சிடிசி பேக்கேஜ்களை வைத்து நீங்கள் செல்லக்கூடிய இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் பல இந்தியர்கள் அதிகமாக பயணிக்கும் ஒரு இடம் துபாய் இங்கு நீங்கள் பார்ப்பதற்கு டெசர்ட் சஃபாரி முதல் புர்ஜ் கலீஃபா வரை, மிராக்கிள் கார்டன் முதல் பாலிவுட் பூங்காக்கள் வரை அனைத்தும் உங்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
அதன்பிறகு இந்தியர்கள் அதிகம் விரும்பும் ஒரு இடம் சிங்கப்பூர் அதிநவீன கட்டிடக்கலை, யுனிவர்சல் ஸ்டுடியோக்கள் போன்ற பலவற்றிற்கு இது பிரபலமானது.
சுற்றுலா பயணம்
இதனை தொடர்ந்து, தீவு நாடான இலங்கைக்கு சென்றால் அங்கு ராமாயணத்தில் வரும் வரலாற்று இடங்களை காணலாம். மேலும், முண்டேஸ்வரி, அனுமன் கோயில், முன்னேஸ்வரம், கோணேஸ்வரம் கோயில், அசோக் வாடிகா என்று பல இடங்கள் உள்ளது.
ரஷ்ய நாட்டிற்கு சென்றால் அங்கு நன்னீர் ஏரி, அற்புதமான பொறியியல் கட்டமைப்புகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வித்தியாசமான வாழ்க்கை முறையை அனுபவிக்க ரஷியன் பேக்கேஜ் உள்ளது.
மலேசியாவில் போர்னியோவின் பச்சைக் காடுகள், லங்காவியின் அமைதியான கடற்கரைகள், வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மால்கள் போன்ற இடங்களை காணலாம். லாஸ் வேகாஸ், வாஷிங்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் உள்ள அதிசயங்களை காணலாம்.
தாய்லாந்தின் மேஜிக்கைக் கண்டறிய 6 நாள் சுற்றுலா திட்டம் உள்ளது. அது உங்களை பட்டாயா மற்றும் பாங்காக்கிற்கு அழைத்துச் செல்லும், இதனை விலை 43,800 ரூபாயில் துவக்கம்.