தங்கத்தால் ஜொலித்த சின்னப்பம்பட்டி 'தங்கராசு நடராஜன்' - சன்ரைஸர்ஸ் சம்பவம்!
சிறப்பாக பந்து வீசிய ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கி அந்த அணி கவுரவித்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தங்கராசு நடராஜன்
இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய ஹைதராபாத் வீரர் நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனால் போட்டி முடிந்த பின்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட நடராஜனுக்கு, ஒரு பெரிய தங்க சங்கிலியை பரிசாக வழங்கி சன்ரைசர்ஸ் அணி கவுரவித்துள்ளது. அவர் 80 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை அணிந்தபடி, வெட்டி கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தங்கராசு நடராஜன் என்ற முழுப்பெயர் கொண்ட அவர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.