5-வது தடவ அடிக்கிறோம்.. 'தல' தான் காரணம் - CSK-வை கிண்டலடிக்கும் பஞ்சாப்!
சென்னை அணியை கிண்டலடித்து மீம் டெம்ப்ளேட்டுகளை பஞ்சாப் அணி பதிவிட்டு வருகிறது.
சென்னை - பஞ்சாப்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் அணி தங்களது எக்ஸ் பக்கத்தில் பல மீம் டெம்ப்ளேட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Done and dusted..?#CSKvPBKS pic.twitter.com/TtkkCgdqFf
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2024
Done and dusted..?#CSKvPBKS pic.twitter.com/TtkkCgdqFf
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2024கிண்டல் பதிவுகள்
அதில் மாஸ்டர் படத்திலிருந்து விஜய் சேதுபதியின் படத்தை பதிவிட்டு "Done and dusted... என்றும், மற்றோரு பதிவில் விஜய்யின் புகைப்படத்தை பதிவிட்டு "சி.எஸ்.கேவுக்கு எதிராக 5-வது வெற்றி (5th consecutive win against CSK)" என்றும் பதிவிட்டுள்ளனர்.
5⃣th consecutive win against CSK! ❤️?#CSKvPBKS https://t.co/yz77oOlLCS pic.twitter.com/gif6BklpEW
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2024
மேலும், தங்களது பாயிண்ட்ஸ் டேபிளை வெளியிட்டு, 7-வது இடத்தை பிடித்ததற்கு தல (தோனி) தான் காரணம் என்றும் பதிவிட்டுள்ளனர். இந்த கிண்டலான பதிவுகளால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
Our position in the points table! ?
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2024
Thala for a reason! ? pic.twitter.com/nKWjZFm10u
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil