Saturday, Jun 28, 2025

ஓய்வை அறிவித்த தோனி? சிஎஸ்கே போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

MS Dhoni Chennai Super Kings TATA IPL
By Sumathi 10 months ago
Report

சிஎஸ்கே பகிர்ந்துள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

 தோனி ஓய்வு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி கேப்டனாக இருந்து 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 2 முறை சாம்பியன்ஸ் கோப்பை என பல சாதனைகளை சிஎஸ்கே படைத்துள்ளது.

dhoni

தற்போது தோனிக்கு 43 வயது என்பதால் ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் தோனி தமக்கு ஏற்பட்டுள்ள மூட்டு வலி காயத்தின் தன்மை குறித்து

இந்திய அணியில் வாய்ப்பில்லை - அணியின் உரிமையாளராக மாறிய சாம்சன்

இந்திய அணியில் வாய்ப்பில்லை - அணியின் உரிமையாளராக மாறிய சாம்சன்


வைரல் பதிவு

மருத்துவர்களின் அறிவுறுத்தலை கேட்டு அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், மேஜர் மிஸ்ஸிங் என்று தோனியின் ஏழாவது நம்பர் ஜெர்சியை குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கலக்கமடைந்துள்ளனர்.