SRH vs MI: தெறிக்கவிட்ட ஹைதராபாத்; பிரம்மாண்ட சாதனை - சண்டை செய்த மும்பை!
ஐபிஎல் வரலாற்றிலேயே பிரம்மாண்ட சாதனை படைக்கப்பட்டுள்ளது.
SRH vs MI
இந்தியாவில் ஐபிஎல் 17வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், மும்பை அணிகள் மோதின. அதில், சன்ரைசர்ஸ் அணி 18 சிக்ஸ் அடித்த நிலையில், அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 சிக்ஸ் அடித்தது.

இந்தப் போட்டியில் மொத்தம் 38 சிக்ஸ் அடிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கை இதுதான்.
பிரம்மாண்ட சாதனை
2018இல் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியிலும், 2021இல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியிலும் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்தன. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் குவித்தது.
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil
அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம் IBC Tamil