IPL வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன 'மிட்சல் ஸ்டார்க்' - எந்தெந்த வீரர்கள் எந்த அணியில்..?

Chennai Super Kings Cricket Mitchell Starc Sports IPL 2024
By Jiyath Dec 19, 2023 11:39 AM GMT
Report

ஐபில்எல் 2024 தொடருக்காக இதுவரை ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல். 

ஐபிஎல் ஏலம்  

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் இன்று துபாயில் நடைபெற்றது. இதில் ஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்கை வாங்குவதற்காக குஜராத் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

IPL வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன

இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மிட்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை மிட்சல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.

மேலும், இதுவரை நடந்த ஏலத்தில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு வாங்கியுள்ளது.

முழு விவரம் 

மேலும், தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரை மும்பை அணி வாங்கியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் இலங்கை வீரர் ஹஸரங்கா ஆகியோரை ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

IPL வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் மற்றும் இந்திய வீரர் ஹர்ஷால் பட்டேல் ஆகியோரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, இந்திய வீரர் ஷர்துல் தாகூர் ஆகியோர் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய் மற்றும் இந்திய வீரர் உமேஷ் யாதவ் ஆகோயோரை குஜராத் அணி வாங்கியுள்ளது. மேலும், இந்திய வீரர் சிவம் மாவி லக்னோ அணியும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப்பை பெங்களூரு அணியும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவலை ராஜஸ்தான் அணியும் வாங்கியுள்ளது.