IPL 2024: இந்த போட்டிக்கு பிறகு.. மற்ற போட்டிகள் வெளிநாட்டில்தான்? பிசிசிஐ தகவல்!
ஐபிஎல் 17ஆவது சீசனில், பாதி போட்டிகள் வெளிநாட்டில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2024
பிஎல் 17ஆவது சீசன் 22ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ சேர்மன் அருண் தோமன்,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றாலும், ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில் தான் நடைபெறும். எக்காரணம் கொண்டும், வெளிநாட்டில் நடத்த திட்டமில்லை. ஐபிஎல் அட்டவணை இரண்டு பாதிகளாக அறிவிக்கப்படும். முதல்பாதி அட்டவணையில் 15 நாட்களுக்கான போட்டிகள் இடம்பெறும்.
பிசிசிஐ தகவல்
அடுத்து, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இரண்டாவது பாதி அட்டவணை வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, முதல்சில போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. 22ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் துவங்கும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், இன்று மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதன்பிறகு, மீதி போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.