தோனியை கவர்ந்த 17 வயது சிறுவன் - சென்னை அணியில் ஒரு மலிங்கவா..! யார் இந்த குகதாஸ்?

MS Dhoni Chennai Super Kings IPL 2024
By Karthick Mar 16, 2024 05:20 AM GMT
Report

 ஐபிஎல் தொடரின் மூலம் பல திறமைசாலிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

IPL

வரும் 22-ஆம் தேதி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை - பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டி பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

17-year-srilankan-college-boy-in-csk-dhoni-impress

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், தற்போது வரை அரை அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வேறுநாட்டில் மீதமிருக்கும் போட்டிகள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

அழுத்தம் கொடுக்கும் CSK உரிமையாளர்கள்..? உண்மை ஓப்பனாக சொன்ன பிராவோ

அழுத்தம் கொடுக்கும் CSK உரிமையாளர்கள்..? உண்மை ஓப்பனாக சொன்ன பிராவோ

அந்தந்த அணியின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றார். சென்னை அணியுடன் கேப்டன் தோனி, நட்சத்திர ஆட்டக்காரர் ஜடேஜா ஆகியோரும் வலைப்பயிற்சியிலும் இணைந்துள்ளனர்.

17 வயது சிறுவன்

சென்னை அணியின் வலைப்பயிற்சியில் 17 வயதே ஆன இலங்கையின் ஜாஃப்னாவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இணைந்துள்ளார். கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மலிங்காவின் பவுலிங் ஸ்டைலை பிரதிபலித்த குகதாஸ் மதுலன், சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்டுள்ளார்.

17-year-srilankan-college-boy-in-csk-dhoni-impress

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், CSK அணி நிர்வாகம் அவரை நெட் பவுலராக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குகதாஸ்'ஸின் பந்துவீச்சு அணியின் கேப்டன் தோனியை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.