IPL: நம்பவைத்து கழற்றி விட்ட RCB அணி; வேதனை தெரிவித்த சாஹல் - காரணமே வேற..!
யுஸ்வேந்திர சாஹலை ஏலத்தில் எடுக்காமல் போனதற்கான காரணம் குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் இயக்குநர் மைக் ஹெசன் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்வேந்திர சாஹல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. முன்னதாக இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2013 முதல் 2021 வரை யுஸ்வேந்திர சாஹல் விளையாடியுள்ளார்.
இதனையடுத்து 2022 சீசனில் பெங்களூரு அணி நிர்வாகம் அவரை கழற்றி விட்டது. இதனால், பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்பியும் தம்மை யாருமே தொடர்பு கொள்ளாமல் கழற்றி விட்டதாக சாஹல் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் இயக்குநர் மைக் ஹெசன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "அந்த நேரத்தில் ஏல இயக்கவியலை அவருக்கு விளக்க முயல்வது மிகவும் கடினமாக இருந்தது.
விளக்கம்
அவர் மீது குறை கூறவில்லை. ஏலத்தில் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அவர் நன்கு அறிந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். நாங்கள் அந்த சீசனில் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்தோம்.
ஏனெனில் நாங்கள் ஹர்சல் படேல் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் ஏலத்தில் வாங்க விரும்பினோம். அதற்காக 3 வீரர்களை மட்டும் தக்க வைத்ததால் எக்ஸ்ட்ரா ரூ.4 கோடி எங்களுக்கு கிடைத்தது.
ஆனால் ஐ.பி.எல். தொடரின் முதன்மை வீரராக இருந்தும் அவருடைய பெயர் நட்சத்திர வீரர்களின் பட்டியலில் வராதது இப்போதும் எனக்கு விரக்தியாக இருக்கிறது. குறிப்பாக 65-வது பெயராக வந்ததால் அவரை எங்களால் ஏலத்தில் எடுக்க முடியவில்லை " என்று தெரிவித்துள்ளார்.