ஐபோனை திருடிய கஸ்டமர் - டெலிவரி ஊழியரை கொடூரமாக கொன்ற பகீர் சம்பவம்!

iPhone Attempted Murder Uttar Pradesh Crime
By Sumathi Oct 01, 2024 08:30 AM GMT
Report

ஐபோனை வாடிக்கையாளரே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபோன் ஆர்டர்

உத்தரபிரதேசம், சின்ஹட் பகுதியை சேர்ந்தவர் கஜனன். இவர் ஆன்லைன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஐபோனை திருடிய கஸ்டமர் - டெலிவரி ஊழியரை கொடூரமாக கொன்ற பகீர் சம்பவம்! | Iphone With Cod Option Kills Delivery Boy Up

தொடர்ந்து அதனை டெலிவரி ஊழியரான பரத் சாகு (30) என்பவர் கொண்டு சென்றுள்ளார். பின் கொடுத்துவிட்டு ஐபோனுக்கான பணம் 1.50 லட்ச ரூபாயை தரும்படி வாடிக்கையாளரிடம் கேட்டுள்ளார். அப்போது கஜனனும் அவரது கூட்டாளியும் சேர்ந்து பரத் சாகுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

கேம் விளையாட போறேன்; ஒரே இரவில் 80 ஆயிரத்திற்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்!

கேம் விளையாட போறேன்; ஒரே இரவில் 80 ஆயிரத்திற்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்!

டெலிவரி பாய் கொலை

பின் பரத் சாகுவின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் வீசியுள்ளனர். பரத் 2 நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராதது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஐபோனை திருடிய கஸ்டமர் - டெலிவரி ஊழியரை கொடூரமாக கொன்ற பகீர் சம்பவம்! | Iphone With Cod Option Kills Delivery Boy Up

அதில் பரத் சாகு கடைசியாக கஜனனிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தேடிய நிலையில் அவரது நண்பரான ஆகாஷ் பிடிபட்டார். அவர் மூலம் பரத் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

உடனே, ஆகாஷை கைது செய்தனர். மேலும், தலைமறைவன கஜனனை தீவிரமாக தேடி வருகின்றனர்.