iPhone ஆர்டர் செய்த வாடிக்கையாளர்; ரத்து செய்த Flipkart- நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு!
வாடிக்கையாளர் ஒருவருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிளிப்கார்ட்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி பிளிப்கார்ட்டில் ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக தனது கிரெடிட் கார்ட் மூலம் ரூ. 39,628 செலுத்தியுள்ளார்.
மேலும், ஜூலை 12-ம் தேதி ஐபோன் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 6 நாட்களுக்கு பிறகு ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக பிளிப்கார்ட்டில் இருந்து அவருக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதனையடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை அவர் தொடர்புகொண்டுள்ளார்.
அப்போது "டெலிவரி பாய் பலமுறை முயன்றும் உங்களை தொடர்பு கொள்ள முடியாததால் பொருளை டெலிவரி செய்ய முடியவில்லை. இதனால் ஆர்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மீண்டும் ஆர்டர் செய்யுங்கள்" என்றும் பதிலளித்துள்ளனர். மேலும், அவரின் பணத்தையும் திருப்பி கொடுத்துள்ளனர்.
அதிரடி உத்தரவு
இதையடுத்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்ட அந்த வாடிக்கையாளர், பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஆர்டரை ரத்து செய்ததன் மூலம் தனக்கு நஷ்டம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மேலும், ஆன்லைன் மோசடிக்கு தான் ஆளானதாகவும், தனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் ஆணையம் "ஆர்டரை ரத்து செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.10,000 இழப்பீடு மற்றும் வழக்கு செலவுக்காக ரூ. 3,000 வழங்கவேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், ஆர்டர் செய்த பொருளின் விலை சுமார் ரூ.7,000 அதிகரித்துள்ளதால், அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஆர்டர் செய்யும்படி அவரிடம் கூறப்பட்டிருக்கிறது. கூடுதல் லாபம் ஈட்டுவதற்காக பிளிப்கார்ட் வேண்டுமென்றே இதைச் செய்திருக்கிறது" என ஆணையம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.