கேம் விளையாட போறேன்; ஒரே இரவில் 80 ஆயிரத்திற்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்!
கேம் விளையாட மொபைலை வாங்கி ரூ. 80 ஆயிரத்திற்கு உணவை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு ஆர்டர்
அமெரிக்கா, மிச்சிகன் மகாணத்தைச் சேர்ந்த சிறுவன் உணவு விநியோக செயிலி மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளான். அவனது தந்தை மகன் மொபைலில் கேம் விளையாடுவதாக எண்ணியுள்ளார். ஆனால், சிறுவன் 1000 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ. 82 ஆயிரம் )ஆர்டர் செய்துள்ளான்.
தொடர்ந்து, முதலில் Happy என்ற உணவகத்தில் இருந்து சில இறால் வகை உணவு வந்தது. பிறகு Leo என்ற உணவுகத்தில் இருந்து ஷவர்மாவில் இருந்து சிக்கன் பிடா சாண்ட்விச்கள் மற்றும் லியோவின் ஐஸ்கிரீம், ஜம்போ இறால், சாலடுகள், சில்லி சீஸ் Fries, ஐஸ்கிரீம், திராட்சை இலைகள், அரிசி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உணவுகள் வந்துள்ளன.
அதிர்ச்சி சம்பவம்
இதுகுறித்து தந்தை ஸ்டோன்ஹவுஸ், "நான் மேசனை படுக்கவைத்துக்கொண்டிருந்தேன், ஒரு கார் எங்கள் வீட்டுக்கு வருவதைப் பார்த்தேன். ஒரு பெரிய பையில் பொருட்களைக் கீழே இறக்கிவிட்டு ஓட்டுநர் காலிங் பெல்லை அழுத்தினார். என் மனைவி ஒரு பேக்கரி உள்ளது, அந்த சமயம், திருமணங்கள் அதிகமிருந்த ஒரு வார இறுதி நாள்.
அதனால் யாரோ அவளிடமிருந்து அலங்கார பொருட்களை கொடுக்க வந்திருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் அது லியோஸ் கோனி தீவில் இருந்து வந்தது. நான் ஒன்றும் புரியாமல் தவித்தேன். காலிங் பெல் மீண்டும் அடித்தது. தொடர்ந்து, அடித்துக்கொண்டே இருந்தது. காருக்குப் பிறகு காராக வீட்டு வந்துகொண்டே இருந்தது.
ஒரு கார் வெளியே செல்ல, மற்றொரு கார் உள்ளே வருவதுமாக இருந்தது. நான் எனது வங்கிக் கணக்கைப் பார்த்தேன், அது குறைந்துகொண்டே வந்தது" எனத் தெரிவித்தார்.
அதன்பின் இச்சம்பவம் குறித்து அறிந்த Grubhub ஸ்டோன்ஹவுஸ் குடும்பத்தை அணுகி அவர்களுக்கு 1,000 அமெரிக்கா டாலர்கள் மதிப்பிலான பரிசு அட்டையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.