இனி...ரயிலில் இருக்கை தேடி உணவு - எப்படி தெரியுமா?
ரயில் பயணத்தின்போது, பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலமே உணவை ஆர்டர் செய்துக்கொள்ளும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூப் (Zoop)
ஐஆர்சிடிசியின் உணவு விநியோக சேவையான ஜூப் (Zoop), சமீபத்தில் ஜியோ ஹாப்டிக் உடன் இணைந்து பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட்பாட் சேவை மூலம் உணவை ஆர்டர் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சாட்பாக்ஸ் மூலம் ஒரு சில எளிய முறைகளில் பயணிகள் தங்கள் PNR எண்ணைப் பயன்படுத்தி ரயில் இருக்கையில் இருந்தே உணவை ஆர்டர் செய்யலாம். ஐஆர்சிடிசி, பயணிகள் வேறு எந்த கூடுதல் மென்பொருள்/ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்யாமல் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
உணவு ஆர்டர்
Zoop இன் புதிய WhatsApp சேவையானது பயணத்தில் அடுத்து வரவிருக்கும் எந்த ஸ்டேஷனிலும் மக்கள் ஆர்டர் செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்வதில் பயணிகளுக்கு சிரமம் இருந்தால் அவர்கள் நேரடியாக சாட்பாக்ஸில் உதவி கேட்கலாம்.
ஆர்டர் செய்தபின் உங்கள் போனிலிருந்தே உணவை டிராக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம்.
வழிமுறை
வாட்ஸ்அப் ஜூப் சாட்போட்டிற்கு முதலில் இந்த +91 7042062070 எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது (https://wa.me/917042062070) என்ற தளத்தின் மூலமாகவோ ஜூப் சாட்போட்டிற்கு சென்று உணவை ஆர்டர் செய்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் ஜூப் சாட்போட்டிற்கு சென்றவுடன் உங்களது 10 இலக்க பிஎன்ஆர் (PNR number) எண்ணைப் பதிவிட்டால் தானாகவே உங்கள் ரயில், பெட்டி, இருக்கை ஆகியவற்றை கணித்துவிடும்.
பின், உங்கள் தகவல்களை சரிபார்க்க சொல்லும். அதன்பின் அடுத்து வரும் ரயில் நிலையத்தை குறிப்பிடும்படி கேட்கும்.
அதை நீங்கள் குறிப்பிட்டப்பின் உங்கள் உணவை ஆர்டர் செய்துக்கொள்ளலாம். ஆர்டர் செய்த உணவு உங்கள் இருப்பிடத்திற்கே வந்துவிடும்.