இனி வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் - அரசு சூப்பர் அறிவிப்பு!
வெளிநாட்டு மாணவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
20 மணிநேரம்
கனடாவில் படிப்பதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் வருகை தருகின்றனர். கனடாவில் கல்விக்காக வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக பணி புரிவதுண்டு. அந்த வகையில் வாரத்தில் 20 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று கனடா அரசு முன்பு அனுமதி அளித்திருந்தது.
இருப்பினும் கடந்த கொரோனா காலகட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக படிப்பிற்காக வந்த மாணவர்கள் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்னும் கட்டுப்பாடு அகற்றப்பட்டது. இதன்படி, ஒரு வாரத்திற்கு 24 மணிநேரம் மேலாக மாணவர்கள் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது.
அரசு அறிவிப்பு
தற்போது பழைய நிலைக்கு திரும்பி 2 ஆண்டுகள் ஆனதால், மாணவர்களின் வேலை நேரத்தை குறைக்க கனடா அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில், இன்றுடன் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், வாரத்துக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், "கனடாவுக்கு சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் நோக்கமே, அவர்களுக்கு கல்வி அளிப்பதற்காகத்தான். ஆனால், அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணி செய்ய அனுமதிப்பதால், கனடாவுக்கு வரும்போதே, கல்வி கற்கும் நோக்கத்துடன் வராமல்,
பணி செய்யும் நோக்கத்துடன் வருபவர்கள் அதிகரிக்கிறார்கள். வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை செய்யும் அனுமதி, செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும். செப்டம்பருக்குப் பிறகு அதை 24 மணி நேரமாக அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என பேசினார்.