12 மணி நேரம் வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு

By Irumporai Apr 24, 2023 08:01 AM GMT
Report

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 12 மணி நேர வேலை

தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை என கூறப்பட்டுள்ளது.

12 மணி நேரம் வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு | 12 Hours Work Bill Sent Department

இந்த நிலையில் தொழில் நிறுவனங்களில் 12 மணிநேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ் , மதிமுக , மமக கடும் எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் திருத்த மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு

மசோதக்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் முன்பாக சட்ட மசோதாக்களை திரும்பெற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது , இன்று மாலை 3 அமைச்சர்கள் கொண்ட குழு தொழில் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் சட்டதுறைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.