12 மணிநேர வேலை; மனித சக்தி அதிகரிக்கும் - தமிழிசை ஆதரவு

Smt Tamilisai Soundararajan Government of Tamil Nadu
By Sumathi Apr 24, 2023 12:26 PM GMT
Report

அதிக நேரம் வேலை பார்க்கும் சட்ட திருத்தத்திற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

12 மணிநேர வேலை

 தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை அதிகரித்து மத்திய அரசு தொழிலாளர் சட்ட விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்தது. தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்றும் வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை என்றும் கொண்டு வரப்பட்டது.

12 மணிநேர வேலை; மனித சக்தி அதிகரிக்கும் - தமிழிசை ஆதரவு | Tamilisai Soundarrajan Supports 12 Hours Working

இதனை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். மேலும், இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழிசை ஆதரவு

அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் அது நிறைவேற்றபட்டது. இந்த மாற்றத்தை பலரும் எதிர்த்து வந்த நிலையில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், "அதிக நேரம் வேலை செய்துவிட்டு அதிக நேரம் ஓய்வு எடுத்தால் மனித சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது மற்றும் சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை. 12 மணி நேர வேலை விவகாரத்தை தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும். அதில் அரசியல் செய்யக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.