Intermittent fasting இருப்பதால் மாரடைப்பு - இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சிக்கோங்க..

Heart Attack
By Sumathi Mar 21, 2024 07:30 AM GMT
Report

Intermittent fasting இருப்பதால் மாரடைப்பு ஏற்படுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

Intermittent fasting 

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது நாம் உணவு உண்ணும் நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அதிக இடைவெளி கொடுக்கும் ஒரு உணவு முறை.

intermittent fasting

பொதுவாக இந்த வகையான உண்ணாவிரத முறையில், 16 மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடாமல், மீதமுள்ள 8 மணி நேரத்தில் போதிய உணவை எடுத்துக் கொள்வார்கள். இந்த உணவு முறை பழக்கத்தின் மூலமாக, உடல் எடை இழப்பு, மேம்பட்ட இன்சுலின் உற்பத்தி மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும் எனக் கூறுகின்றனர்.

அதிக எடை மற்றும் உடல் பருமன், இதய நோய்க்கான முக்கிய காரணிகளாகும். இடைப்பட்ட உண்ணாவிரதம் இருப்பது மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது. இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பிற இருதய பாதிப்புகளின் ஆபத்துகள் குறைகிறது.

தூக்கத்தில் மாரடைப்பு வருவது ஏன் தெரியுமா? அவசியம் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

தூக்கத்தில் மாரடைப்பு வருவது ஏன் தெரியுமா? அவசியம் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

மாரடைப்பு ஏற்படுமா?

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் இதயத்துக்கு நல்லதுதான் என்றாலும் இது அனைவருக்கும் ஏற்றது அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம், நீரிழிவு நோய், நாள்பட்ட உடல் சார்ந்த பாதிப்புகள் உள்ளவர்கள் இத்தகைய உண்ணாவிரத முறையை தொடங்குவதற்கு முன் சுகாதார நிபுணர்வுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

heart attack

ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் உணவு உட்கொள்ளலை கட்டுப்படுத்துவது நீண்ட காலம் வாழ்வதோடு தொடர்புடையது அல்ல என்பது நிபுணர்கள் சிலரின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.