இரவில் பல் துலக்காதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்

Heart Attack
By Sumathi Feb 19, 2024 10:28 AM GMT
Report

இரவு பல் துலக்காததால் மாரடைப்பு ஏற்படும் என ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது. மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.

பல் துலக்குதல்

பல் துலக்காதது மற்றும் வாய்வழி ஆரோக்கியத்தை புறக்கணிப்பது உங்கள் மொத்த உடம்புக்கும் ஆபத்தை உண்டாக்கும். இரவில் பல் துலக்காதவர்களுக்கு இதய கோளாறு ஏற்படும் அபாயம் உண்டு.

brushing-teeth-at-night

ஆராய்ச்சி கூற்றின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயளிகளில் ஒரு நாளைக்கு இரண்டுமுறை பல் துலக்காதவர்களுக்கே இருதய இறப்பு விகிதம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

பற்களை பாதிக்கும் இந்த உணவுகளை தப்பித்தவறி கூட அதிகமாக சாப்பிட்டு விடாதீங்க!

பற்களை பாதிக்கும் இந்த உணவுகளை தப்பித்தவறி கூட அதிகமாக சாப்பிட்டு விடாதீங்க!

மாரடைப்பு

பிளேக் அல்லது கொழுப்பு தமனிகளின் சுவர்களில் அடைப்பு எற்படுவதால் இரத்த ஓட்டம் நடக்காமல் அடைக்கிறது. சரியாக பல் துலக்காதது, பல் சிதைவு மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலை பாதிக்கிறது. மேலும் இது நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாவை சமநிலையின்மை செய்வதால் வீக்கம் மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது.

இரவில் பல் துலக்காதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா? அதிர்ச்சி தகவல் | Brushing Teeth At Night Can Cause Heart Attack

இதனால் நாளடைவில் பிரீயண்டால்டல் தொற்று, ஈறு அழற்சி போன்றவற்றை ஏற்படலாம். மேலும், மருத்துவர்களின் கூற்றுப்படி இரு நாளைக்கு இரண்டுமுறை ஃபூளுரைடு பேஸ்ட் பயன்படுத்தி துலக்கவேண்டும். பற்களின் இடையே உள்ள உணவு துகள்களை அகற்ற ஃப்ளார்ஸ் உபயோகிக்க வேண்டும்.

வருடத்திற்கு இருமுறை பல் பரிசோதனை செய்யவேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.