பற்களை பாதிக்கும் இந்த உணவுகளை தப்பித்தவறி கூட அதிகமாக சாப்பிட்டு விடாதீங்க!

life-style-health
By Nandhini Jul 08, 2021 06:57 AM GMT
Report

விளைவை ஏற்படுத்திவிடுமாம்! பற்களை சரியாக சுத்தப்படுத்தத் தவறினால், பற்களில் ‘டார்டார்’ எனும் காரை படிந்துவிடும். இது வாய்க்குள் பெருகும் பாக்டீரியாவின் பெருக்கத்தால் ஏற்படுகிறது. இந்தக் காரை பல்லின் வெளிப் பூச்சான எனாமலை சிதைப்பதால், பல்லின் நிறம் மாறுகிறது.

பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இனிப்புகள் எளிதில் கரையக் கூடியதாக இருக்கும்.

சில வகையான இனிப்புகள் மென்று சாப்பிடக் கூடியதாக இருக்கும். சாக்லெட், லாலிபாப், ஜெல்லி போன்றவை பற்களில் ஒட்டிக்கொள்ளும் வகையான இனிப்புகள் ஆகும்.

பற்களில் இவை ஒட்டிக்கொள்ளும்போது பாக்டீரியாவுக்கு கொண்டாட்டமாக மாறிவிடுகிறது.

பற்களை பாதிக்கும் இந்த உணவுகளை தப்பித்தவறி கூட அதிகமாக சாப்பிட்டு விடாதீங்க! | Life Style Health

பற்களை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி பார்ப்போம் -

இனிப்பு உணவுகள்

இனிப்பு உணவு, பானங்களை அருந்தும்போது அது பற்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன. சர்க்கரை உணவை சாப்பிடுவது பற்களின் எனாமலை பாதிப்புக்கு வழிவகுக்கக்கூடும்.

உலர் திராட்சை, அன்னாசிப்பழம்

உலர் திராட்சை, அன்னாசிப்பழம் இவை இரண்டும் சாப்பிடுவதற்கு சுவையாகதான் இருக்கும். ஆனால், அவை பற்களின் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனால், பற்சொத்தைக்கு வருவதற்கு காரணமாகி விடுகிறது. எப்போதாவது இவற்றைச் சாப்பிட்டால் தவறு இல்லை. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் இடையே சிக்கும் துணுக்குகள் மூலம் கிருமி பெருக்கம் ஏற்பட்டு பல் சொத்தை ஆகலாம்.

ஊறுகாய்

ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்க உப்பு, வினிகர் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இவை ஊறுகாயில் ஒருவித அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த அமிலம் பற்களின் எனாமலை பாதிப்படையச் செய்கின்றன.

சிட்ரிக் பழங்கள்

சிட்ரிக் பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அது பற்களுக்கு நல்லது இல்லை. சிட்ரிக் அமிலம் பற்களின் எனாமலை பாதித்து பற்கூச்சம், பல் சொத்தை போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே சிட்ரஸ் பழச் சாறு அருந்தும்போது பற்கள் மீது படாமல் ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடிப்பது நல்லது.

பற்களை பாதுகாக்க -

காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒருமுறை என இருமுறை பல் துலக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குப் பல் துலக்குவது நல்லது. பற்களை வேகவேகமாகவும், முன்னும் பின்னுமாகவும் அழுத்தமாகத் தேய்த்தால், பற்கள் விரைவில் தேய்ந்துவிடும்.