காலையில் எழுந்தவுடன் தப்பித்தவறி கூட இதையெல்லாம் செய்து விடாதீங்க!

life-style-health
By Nandhini Jun 15, 2021 07:19 AM GMT
Report

ஒரு நாளின் தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால், அது தரும் நம்பிக்கை அந்த நாளையே மலர்ச்சியானதாக மாற்றிவிடும்.

விடியற்காலையில் எழுந்தால் மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் உங்களை மகிழ்ச்சியாக மாற்றும். தவறான முறையில் உங்கள் அதிகாலை பொழுதை துவங்குவது உங்கள் மொத்த நாளையும் மோசமாக்கிவிடலாம்.

காலையில் எழுந்ததும் நாம் அன்றாட வாழ்வில் தினமும் செய்ய கூடாதவை பற்றி பார்ப்போம்.

தேநீர் அல்லது காபி

வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காபி குடிப்பதால் நீரிழப்பு, நெஞ்செரிச்சல், வாந்தி, குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எழுந்திருக்கும் போது

படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது மிக விரைவாக எழுந்திருக்கக் கூடாது. அப்படி அவசரமாக எழுந்தால் மனதில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும். அது ஆற்றல் ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காலை உணவு

தப்பித்தவறி கூட காலை உணவை தவிர்க்கக்கூடாது. அப்படி தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்கரையின் அளவு அதிகரித்து, ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். காலை உணவை தவிர்த்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புகள் உள்ளன.

மீதமான உணவு

காலையில் வெறும் வயிற்றில் இரவு செய்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி தொடர்ந்து சாப்பிட்டால் நாளடைவில் உடலுக்கு கேடு விளைவித்து விடும்.

காலையில் எழுந்தவுடன் தப்பித்தவறி கூட இதையெல்லாம் செய்து விடாதீங்க! | Life Style Health

செல்போன்

காலை எழுந்த உடன் செல்போன் பேசவோ, கம்ப்யூட்டரை பார்க்கவோ கூடாது.

பல் துலக்குதல்

காலையில் பல் துலக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துகொள்ளக் கூடாது. அதிக நேரம் துலக்குவதால் ஈறுகள் கெடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதேபோல, செம்மண், சாம்பல் போட்டு பல் துலக்கக்கூடாது.

புகைப்பிடித்தல்

சிலருக்கு காலையில் எழுந்தவுடனே புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும். இதை தினமும் வழக்கமாக்கிவிட்டால் நுரையீரல், கழுத்து பகுதிகள் அதிக பாதிப்பு அடையும்.

க்ரீன் டீ

காலையில் எழுந்ததும் தலை சுற்றல் வரக்கூடியவர்கள் பால், டீ, காபிக்கு பதிலாக லெமன் டீ, க்ரீன் டீ போன்றவற்றை குடிக்கலாம். 

மது குடித்தல்

சிலருக்கு காலை எழுந்ததும் மது அருந்தும் பழக்கம் இருக்கும். அது நேற்றைய இரவின் தலைவலி போக என்று காரணம் சொல்வார்கள். இந்தப் பழக்கத்தை உடனே நிறுத்துவது நல்லது. இல்லையெனில், குடிநோயாளியாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.